Jun 9, 2010

நெருப்பு நரி தமிழ் விசைபலகை Firefox Tamil Keyboard

நாம் அனேக விசைபலகைகளை பார்த்திருப்போம் பலவற்றை உப‌யோகித்திருப்போம். சிலவகை இலவசமாகவும் பலவகை விலைக்கும் கிடைக்கிறது. இணையதளங்களில் பல நேரங்களில் மற்ற தளங்களுக்கு சென்று டைப்செய்து பின்னர் பேஸ்ட் செய்கிறோம். ஆனால் நெருப்புநாரி தமிழ் விசைபலகை இணையதளங்களில் டைப்செய்வதற்க்கு சிறப்பாக உள்ளது. மற்றும் எளிதாகவும் உள்ளது. நான் இதைக்கொண்டுதான் வேகமாகவும் சரியாகவும் டைப்செய்யகிறேன். மேலும் உங்களுக்கு தெரிந்த விசைபலகையை பயன்படுத்திக்கொள்ளலாம். நான் பாமினி விசைபலகையை பயன்படுத்துகிறேன். இதை தரவிறக்கம் செய்ய இங்கே செல்லுங்கள்.

Jun 8, 2010

தமிழ் செய்தித்தாள் செல்பேசியில்

நாம் இப்பொழுது செய்திதாள் வாசிப்பது என்பது அறிதான ஒன்றாகிவிட்டது. செய்திதாள் வாங்கி நாளாகிவிட்டது. எல்லாரும் இணையதளத்தில் உள்ள செய்திகளை எளிதாக வாசித்துவிடுகிறோம். இப்பொழுது அதையும் சுருக்கி செல்பேசியில் நமக்கு விருப்பமான செய்தித்தாள்களை வாசித்துக்கொள்ளலாம். அதற்க்கு இந்த News Hunt   மென்பொருள்  உதவுகிறது. உங்கள் செல்பேசியில் GPRS தொடர்பு இருந்தால் போதுமானது. தமிழ் fonts இல்லாவிட்டாலும் தமிழ் எழுத்துகளை வாசிக்கலாம். இது இலவசமாகவே கிடைக்கிறது.

Feb 22, 2010

சிறப்பான தரை சித்திரம் (படங்கள்)

நாம் நம் நாட்டில் ரோடில் தரையில்  படங்கள் வரைந்திருப்பதை பார்த்திருக்கலாம் இவைகள் நம் நாட்டில் மாத்திரம் அல்ல வெளிநாடுகளிலும் வரைந்துகொண்டுதான் இருக்கிறார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களை பாருங்கள் மிகவும் வித்தியாசமான முறையில் வரைந்திருக்கிறார்கள். எல்லா படங்களும் ரோடில் வரைந்தவைகள்தான் ஆனால் எல்லாம் தத்ரூபமாக நிஜம்போல் உள்ளது.

Feb 8, 2010

Javascript (ஜாவாஸ்க்ரிப்ட்) என்றால் என்ன?

ஜாவாஸ்க்ரிப்ட் என்பது வலைத்தளங்களை வடிவமைக்க பரவலாகப் பயன்படும் ஒரு கணினி நிரல் மொழி ஆகும். பயனர் பக்க செயற்பாடுகள் ஜாவாஸ்க்ரிப்ட்டினால் பெரிதும் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. 1995 ஆம் ஆண்டு நெற்சுகேப் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொழிக்கு தற்போது மிகவும் விருத்தி பெற்ற மென்பொருள் கட்டமைப்புகள் உள்ளன. யேகுவெரி, மொடூல்சு, கூகிள் வலை கருவிப்பெட்டி போன்றவை பரவலான பயன்பாட்டில் இருக்கும் ஜாவாஸ்க்ரிப்ட் கட்டமைப்புகள். பெயரில் ஒத்த ஜாவா நிரல் மொழிக்கும் இதற்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை.
Loading...